ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்-பிரேமலதா விஜயகாந்த்

இன்று ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.மேலும் முதலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும் பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறோம். இந்த சட்டத்தால் யாரும் பாதிப்படைய கூடாது. அப்படி யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் தட்டி கேட்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க. இருக்கும்.
விஜயகாந்த் மற்ற கட்சி தலைவர்களுக்கு உதாரணமாக உள்ளார். அதற்கு சான்று விஜயகாந்த் திரைப்படத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை ஏழை ,எளிய மக்களுக்கு தானமாகவும் , பொருட்களாகவும் வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தொண்டர்கள் தயாராகி விட்டார்கள். தமிழகம் முழுவதும் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணியுடன் சேர்ந்து போட்டியா…? அல்லது தனித்து போட்டியா…? என இப்போதே சொல்ல முடியாது என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025