‘என் அஞ்சலிகள்’ – கேப்டன் வருண் சிங் மறைவு குறித்து கமலஹாசன் ட்வீட்..!
கேப்டன் வருண் சிங் மறைவு குறித்து கமலஹாசன் ட்வீட்
நீலகிரி மாவட்டம் கடந்த 8-ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வருணசிங் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குரூப் கேப்டன் வருண்சிங் மறைந்து விட்டார். வீரத்திற்காகவும், தியாகத்திற்காகவும் மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார். என் அஞ்சலிகள்.’ என பதிவிட்டுள்ளார்.
குரூப் கேப்டன் வருண்சிங் மறைந்து விட்டார். வீரத்திற்காகவும், தியாகத்திற்காகவும் மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார்.
என் அஞ்சலிகள்.— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2021