எனது கோரிக்கை அரசு வேலை தான்.! சர்கர நாற்காலி டி20 உலகக்கோப்பையை வென்ற கேப்டன் வினோத்பாபு கோரிக்கை.!
மாற்றுத்திறனாளிகளுக்கான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் கேப்டன் வினோத்பாபு, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
லண்டனில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி டி-20 உலக கோப்பை போட்டி தொடங்கி நடைபெற்றது. இதில் இந்திய அணி உலகக்கோப்பை வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் தமிழகத்தைச்சேர்ந்த வினோத் பாபு, முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, லண்டனில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக கோப்பை டி-20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் வென்ற இந்திய அணியின் கேப்டனும்,
1/2 pic.twitter.com/0WvAC8Rsvo
— CMOTamilNadu (@CMOTamilnadu) April 18, 2023
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வினோத் பாபு, தமிழகத்தின் முதல் மாற்றுத்திறனாளியாக இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி, கடந்த 5-6 வருடங்களாக அணிக்கு விளையாடி வருகிறார். லண்டனில் நடைபெற்ற சக்கர நாற்காலி டி-20 உலக கோப்பையை வென்ற பின், முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தன் கோரிக்கையை முன் வைத்தார்.
அதன்பிறகு வினோத் பாபு அளித்த பேட்டியில், தான் வறுமையில் வாடி வருவதாகவும் இந்த சமயத்தில் தனக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைத்தால், அது தன் குடும்பத்திற்கு மிக உதவியாக இருக்கும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார். முன்னதாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வென்று இந்திய அணி டி-20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.