மணிகண்டனால் எனது அரசியல் வாழ்கை வீணாகி விட்டது..!கொள்ளை தலைவன் முருகன் ..!

Published by
murugan

திருச்சியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி 13 கோடி மதிப்புள்ள 29 கிலோ எடை கொண்ட தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட உள்ள முருகனை நேற்று முன்தினம்  7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.நேற்று நடத்திய  விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில் முருகன் கூறுகையில் , லலிதா ஜுவல்லரி துளையிட எங்களுக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டது.
பின்னர் கொள்ளையடித்த நகையை மதுரையிலுள்ள கணேசன் வீட்டிற்கு சென்று கொண்டு மெஷினில் எடை போட்டு  சுரேஷுக்கு 6 கிலோவும் , கணேசனுக்கு 7 கிலோ கொடுத்து விட்டு பின்னர் நானும் சுரேஷும் நீடாமங்கலம் வந்தோம் .காரில் வரும்போதே  செல்போன் மூலமாக  மணிகண்டனை நீடாமங்கலம் வரச்சொன்னேன்.சுரேசை நீடாமங்கலத்தில் இறக்கிவிட்டு நான் சென்னை புறப்பட்டேன்.
சுரேஷும் , மணிகண்டனும் அந்த நகையை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்லும்போது போலீசிடம் மாட்டிக் கொண்டனர். இந்த செய்தியை அறிந்த நான் சென்னை வரை நகை எடுத்துக்கொண்டு சென்றால் போலீசில் மாட்டிக் கொள்வோன் என எண்ணி பெரம்பலூரில் உள்ள வனப்பகுதியில் சிறிது அளவு நகையை புதைத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.
மணிகண்டன் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் இருந்தால் நான் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக  ஆகி இருப்பேன் .எனது ஆசை அரசியல்வாதி ஆக வேண்டும் என்பது தான் நேரடியாக அரசியல் சென்று வெற்றி பெறுவது ரொம்ப சிரமம். அதுவே தமிழ் சினிமாவில் இருந்து பிறகு ஏதாவது ஒரு கட்சியில் சேரவேண்டும் என நான் திட்டமிட்டு இருந்தேன்.
ஆனால் மணிகண்டன் சிக்கியதால் வேறு வழியில்லாமல் நானும் சரணடைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை  சில போலீசாருக்கு நான் பங்கு கொடுத்து உள்ளேன். அவர்களின் பெயர்களை நான் கூற விரும்பவில்லை. வேலூர் சிறையில் தான் கணேசனும் , எனக்கும் பழக்கம். கணேசன் நகைகளை உருக்கி விற்பதில் கில்லாடி என்பதால் அவரை பங்குதாரராக நாங்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஏற்றுக் கொண்டோம்.
நாங்கள் ஏழை வீட்டிலும் , கடையிலும் கொள்ளை அடிக்க மட்டும் நகைக்கடை மற்றும் தொழிலதிபர் வீட்டில் தான் கொள்ளை அடிப்போம் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

மன்மோகன் சிங் கொண்டுவந்த திட்டங்கள் : 100 நாள் வேலை முதல்.., கல்வி உரிமை சட்டம் வரை…

டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…

40 minutes ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…

60 minutes ago

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

2 hours ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

3 hours ago