என் ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது…அதிமுகவினால் அல்ல.. எஸ்.வி சேகர் பதில்

Published by
murugan

என் ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல என எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் எஸ்.வி.சேகர் அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என கூறி சர்ச்சை வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், சென்னையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் அவர் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். எஸ்.வி.சேகர் அதிமுக கொடியை அண்ணாவைக் காட்டித்தான் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அதிமுக எம்.எல்.ஏ வாக அவர் ஐந்து ஆண்டு பெற்ற சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். தற்போது எம்.எல்.ஏ பென்சன் வாங்குகிறார். அதையும் திருப்பிக் கொடுக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துள்ள எஸ்.வி.சேகர், நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை. சசிகலாவை சந்தித்த இல்லை. நான் விசுவாசியல்ல. நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத்தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். MGR JJ படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா.

என் MLA சம்பளம், என் ஓயூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல. என் சம்பளம் தவிர ஒரு பைசா கூட கமிஷனாக சம்பாதிக்காதவன் நான். அப்படி எத்தனை விசுவாசிகள் சொல்வீர்கள்!? யோசியுங்கள். புரியும். இல்லை அம்மாவின் ஆத்மா புரியவைக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Published by
murugan

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

23 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

26 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

57 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago