என் ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது…அதிமுகவினால் அல்ல.. எஸ்.வி சேகர் பதில்

என் ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல என எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் எஸ்.வி.சேகர் அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என கூறி சர்ச்சை வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், சென்னையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் அவர் மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். எஸ்.வி.சேகர் அதிமுக கொடியை அண்ணாவைக் காட்டித்தான் வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். மான ரோஷம் இருப்பவராக இருந்தால், அதிமுக எம்.எல்.ஏ வாக அவர் ஐந்து ஆண்டு பெற்ற சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். தற்போது எம்.எல்.ஏ பென்சன் வாங்குகிறார். அதையும் திருப்பிக் கொடுக்க தயாரா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள எஸ்.வி.சேகர், நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை. சசிகலாவை சந்தித்த இல்லை. நான் விசுவாசியல்ல. நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத்தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். MGR JJ படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா.
என் MLA சம்பளம், என் ஓயூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல. என் சம்பளம் தவிர ஒரு பைசா கூட கமிஷனாக சம்பாதிக்காதவன் நான். அப்படி எத்தனை விசுவாசிகள் சொல்வீர்கள்!? யோசியுங்கள். புரியும். இல்லை அம்மாவின் ஆத்மா புரியவைக்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025