திரு.பிபின் ராவத் அவர்கள் தமிழ் மண்ணில் விபத்தில் உயிரிழந்ததை என் மனம் ஏற்க மறுக்கிறது – தெலுங்கானா ஆளுநர்

Default Image

தலைமுறை தலைமுறையாக இராணுவப்பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த திரு.பிபின் ராவத் அவர்கள் தமிழ் மண்ணில் விபத்தில் உயிரிழந்ததை என் மனம் ஏற்க மறுக்கிறது என தெலுங்கானா ஆளுநர் ட்வீட்.

ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன.

வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்களை அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மூலம்  மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன. அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த இந்திய ராணுவ முப்படை தலைமை தளபதி திரு.பிபின் ராவத் அவர்கள், அவரது மனைவி திருமதி. மதுலிகா ராவத் அவர்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்கள் 11 பேருக்கும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வெலிங்டன் செல்கிறேன்.

தலைமுறை தலைமுறையாக இராணுவப்பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த திரு.பிபின் ராவத் அவர்கள் தமிழ் மண்ணில் விபத்தில் உயிரிழந்ததை என் மனம் ஏற்க மறுக்கிறது மிகுந்த கவலையுடனும்,வருத்தத்துடனும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தற்சமயம் வெலிங்டன் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்