டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாககொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு ஆசிரியராய் பணியை தொடங்கி தனது அயராத உழைப்பால் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவமேதை டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களை சிறப்பிக்கும் வகையில் அன்னாரது பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடலுக்கு கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போன்று ஒருவனது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது. அத்தகைய சிறப்புமிக்க கல்வியை மாணாக்கர்களுக்கு போதிக்கும் ஆசிரிய பெருமக்கள் ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என்று தெய்வ நிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள்.
நாட்டின் வருங்கால தூண்களான மாணவ செல்வங்களுக்கு அழிவில்லா கல்வி செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு இந்நன்னாளில் எனது உளம்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…