இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பாஜக மாநிலத் தலைவரான எல். முருகன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான இன்று பலர் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் பாஜக மாநிலத் தலைவரான எல். முருகன் அவர்களும் தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது,நல்லாசிரியராக தமது இறுதிகாலம் வரை வாழ்ந்து காட்டிய தத்துவமேதை டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை செப்டம்பர் 5ஆம் தேதி நம் தேசத்தில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதை போன்று சமூகத்திற்கு கல்வியை வழங்கும் ஆசிரியர்களை ஒப்பற்ற நிலையில் வைத்து போற்றுகிறோம். தேசிய கல்விக் கொள்கை 2020ஐ முழுமையாக செயல்படுத்தி நம் நாட்டு மாணவ செல்வங்களை உலகளவில் உயர்த்தும் பெரும் பொறுப்பு நம் ஆசிரியர் கையில் தான் இருக்கிறது. நம் மாணவர்களின் கல்வி ஆற்றல் உலகின் உயர்ந்த நிலையை அடைந்திட, மேம்பட்டிட உதவும் நம் ஆசிரிய பெருமக்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…