அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் -கமலஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் வேளாண் சட்டம் ரத்து குறித்து ட்விட்.
நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், போராடிய விவசாயிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் வேளாண் சட்டம் ரத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள்.’ என பதிவிட்டுளளார்.
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 20, 2021