மகன் பிரக்ஞானந்தாவிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்! – சீமான்

Default Image

தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தா, நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்துள்ளமைக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் என சீமான் ட்வீட். 

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில், 16 வீரர்கள் கலந்து கொண்டனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

இந்நிலையில், உலக செஸ் சாம்பியனை வெற்றிக் கொண்ட பிரக்ஞானந்தாவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி, முதலவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புமகன் பிரக்ஞானந்தா, உலக அளவிலான ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட்’ இணைய வழி சதுரங்கப்போட்டியில் பங்கேற்று, உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே நாட்டுவீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இளம்வயதிலேயே சாதனை புரிந்துள்ளமைக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

சதுரங்க ஆட்டத்தில் தனக்கு இருக்கின்ற தனித்திறனை மேன்மேலும் வளர்த்து விருதுகள் பல வெல்லவும், உலகத் தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் மகன் பிரக்ஞானந்தாவிற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்