எனக்கு பிறகும் எனது குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளராக துரைமுருகன் மற்றும் தி.மு.க பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
திமுகவில் துணை பொதுச்செயலாளராக 3 பேர் உள்ளனர். ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ள நிலையில் ,திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும், ஆ.ராசாவும் நியமனம் செய்யப்படுவதாக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன் பின்னர் திமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன் பேசுகையில் , என்னை வளர்த்தவர் எம்ஜிஆர் . என் தலைவர் கருணாநிதி. என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு பாராட்டியவர் எம்ஜிஆர்.இந்தியை திணிப்போம் என ஆக்ரோஷமாக வந்திருப்பவர்களை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்நான் மறைந்துபோனதற்கு பிறகும் கூட என குடும்பம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.எனது குடும்பம் எப்போதும் திமுகவுக்கு நன்றியோடு இருக்கும்.திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் என்றும் துரோகம் நினைக்க மாட்டேன் என்று பேசினார்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…