திமுகவின் அறிவிப்புகளை ஸ்டாலின் அறிவிக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் தான் அறிவிக்கிறார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சனம்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி, இன்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, மக்கள் மத்தியில் பேசிய அவர், அதிமுகவின் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு, 4 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.884 கோடி வழங்கப்பட்டுள்ளது என பேசிய முதல்வர், அதிகாரம் இருந்த போது திமுக மக்களுக்களிடம் மனு வாங்கவில்லை என்றும் இப்போது மேடையில் பெட்டி வைத்துக் கொண்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார் எனவும் கூறியுள்ளார். திமுக மக்களை ஏமாற்றி வருகிறார்கள், ஒரு ஐந்து முறை ஆட்சியில் ஸ்டாலின் துணை முதல்வர், உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தபோது ஏன் திட்டங்களை நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பினார்.
திமுகவினரை கண்டாலே மக்களுக்கு அலர்ஜி. அப்படிப்பட்ட கட்சி தான் திமுக. சட்ட ஒழுங்கு பேணி காப்பதில் தமிழகம் முதலிடம். இதைக்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார் ஸ்டாலின். அதிமுக ஜனநாயக கட்சி கீழே இருக்கின்றவர்கள் கூட முதல்வராக முடியும். திமுக கட்சியில் வரவே முடியாது. வாரிசு அரசியல் செய்கிறார்கள், கலைஞர் கருணாநிதி, முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என குடும்ப அரசியல் செய்கிறார்கள் என குற்றசாட்டினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கும் கட்சிக்கும் என்ன சம்மந்தம். இவர் அதிமுகவை குறித்து குற்றம் கூறி பிரச்சாரம் செய்கிறார். என் அனுபவம் தான் உதயநிதி ஸ்டாலின் வயது, அவர் அதிமுகவை பற்றி பேசுவதா?. தற்போது திமுகவின் அறிவிப்புகளை ஸ்டாலின் அறிவிக்கவில்லை உதயநிதி ஸ்டாலின் தான் அறிவிக்கிறார். அந்தளவு திமுக படும் பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இன்று மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள், நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காக கட்சி தொடங்கவில்லை, குடும்பத்துக்கு நல்லது செய்வதற்காக தொடங்கப்பட்ட கட்சி என விமர்சித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…