என் எதிரி இவர்தான் : ரஜினிகாந்த் ..!
கடந்த வாரம் தூத்துக்குடி சென்று வந்த ரஜினி விமான நிலையத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தூத்துக்குடி மருத்துவமனையில் யார் நீங்கள்? என ரஜினியிடம் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஒரு நபர் எழுப்பிய கேள்வியும் சமூக வலைதளங்களில் வைரலானது. ரஜினியின் பேட்டி சர்ச்சையானதற்கும் – நான் தாப்பா ரஜினி எனும் ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதற்கும் பின்னணியில் தி.மு.க ஐ.டி விங் இருந்துள்ளது.
ரஜினி தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பிய உடன் ட்விட்டர் முழுக்க நான் தான் பா ரஜினி எனும் ஹேஸ்டேக் டிரென்டானது. இப்படி டிரென்ட் ஆக்கியவர்கள் பெரும்பாலும் தி.மு.க ஆதரவாளர்களாகவே இருந்தனர். தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் கூட நான் தான் பா ரஜினி எனும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தினர். இதன் மூலம் நெகட்டிவ் விஷயம் ஒன்றுக்காக ரஜினியின் பெயர் உலகின் பல்வேறு நாடுகளிலும் அடிபட்டது.
மேலும் ஐரோப்பிய நாடுகளில் தங்களுக்கு உள்ள கான்டேக்டுகளை பயன்படுத்தி தி.மு.க ஐ.டி., விங்க் அங்கும் ரஜினி பெயரை டேமேஜ் செய்ய ஆரம்பித்துள்ளது. தி.மு.க அபிமானிகள் சிலர் காலா படத்திற்கு நார்வேயில் தடை பெற முயற்சி செய்து வருகின்றனர். இந்த அனைத்து செயல்களின் பின்னணியிலும் மு.க.ஸ்டாலினின் மிக நெருக்கமான ஒரு உறவினர் உள்ளார். ரஜினி தான் ஸ்டாலினுக்கு அரசியலில் எதிரியாக இருப்பார் என்று கருதும் அந்த உறவினர், விஜயகாந்த், வைகோவை சமூகவலைதளங்களில் கேலிப் பொருளாக்கியது போல் ரஜினினையும் கேலிப்பொருளாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தகவல் அனைத்தும் ரஜினியிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் தி.மு.கவினர், நான் தான் பா ரஜினி எனும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி என்னவெல்லாம் செய்தார்கள் என்பதையும் ஆதாரத்துடன் மக்கள் மன்ற நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். இதனை பார்த்த ரஜினிகாந்த், எனக்கு அரசியலில் முதல் எதிரி ஸ்டாலின் தான் என அவர்களிடம் கூறியுள்ளார்.