வாக்களித்த மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதே எனது தலையாய கடமை –  ரவீந்திரநாத் குமார்

Default Image

நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.மேலும் 58 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் இரவீந்திரநாத் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் அதிமுக-வினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே  அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தலைமை எடுக்கும் முடிவுதான் இறுதியானது, தேவையற்ற கருத்துக்கள் பதிவிடுவதை தவிர்க்கவேண்டும். வாக்களித்த மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றுவதே எனது தலையாய கடமை என்று  ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்