அரச குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்…! – மு.க.ஸ்டாலின்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் உயிரிழந்ததை, ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 99. இதுகுறித்து அவரது மனைவியான எலிசபெத் மகாராணி, துக்கத்துடன் கணவர் இறந்த செய்தியை தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து, ட்வீட்டர் பக்கத்தில் , அரச குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக, பதிவிட்டுள்ளார்.
I am saddened to hear of the passing of HRH The Prince Philip.
On behalf of DMK and Tamils living around the world, I extend my condolences to The Royal Family. https://t.co/juy6Pyk3v5
— M.K.Stalin (@mkstalin) April 9, 2021