ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். – முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 95 வயதான ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவர்கள் இரண்டு நாட்கள் முன்பு உடல் நலக்குறைவால் தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கதறி அழுத ஓபிஎஸ் : இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது தாயார் இறந்த செய்தியை அறிந்த ஓபிஎஸ் மருத்துவமனையிலேயே கதறி அழுதார். இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தேனியிலுள்ள பெரியகுளம் வருகின்றனர்.
முதல்வர் இரங்கல் : தற்போது ஓபிஎஸ் தயார் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வருத்தத்தை டிவிட்டர் வாயிலாக பதிவிட்டுள்ளார். அதில், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைந்தார் என்ற செய்தியால் மிகவும் வேதனையடைகிறேன் எனவும்,
ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவும் அந்த டிவிட்டரில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…