கலைஞரால் ‘கலைஞானி’ என போற்றப்பட்ட எனது அன்புக்குரிய நண்பர் கமல்! மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்.
திரையுலகின் பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவிக்க காலையிலேயே அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதனை தொடர்ந்து, பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களிலும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘முத்தமிழறிஞர் கலைஞரால், ‘கலைஞானி’ என போற்றப்பட்ட, எனது அன்புக்குரிய நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலமுடன் நீண்ட காலம் வாழ்க.’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025