உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள்,பஞ்சாப்பில் 117 தொகுதிகள்,மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து,உபி, கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், உ.பி, கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், நான்கு மாநிலங்களில் ஆட்சியமைக்கவுள்ள பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘உத்தரப்பிரதேசம்,உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக கட்சியின் மகத்தான வெற்றிக்கு காரணமாக அமைந்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான்கு மாநிலங்களில் பதவியேற்கவுள்ள புதிய முதலமைச்சர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…