மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது.
இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் பாராலிம்பிக்கில் படைத்துள்ளார். மேலும், ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியில் சிங்ராஜ் வெண்கலம் வென்ற நிலையில், தற்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர்களது வெற்றிக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…