சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்…! – கமலஹாசன்

மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது.
இந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள மணீஷ் நர்வால் 218.2 புள்ளிகளுடன் பாராலிம்பிக்கில் படைத்துள்ளார். மேலும், ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கிசூடுதல் போட்டியில் சிங்ராஜ் வெண்கலம் வென்ற நிலையில், தற்போது வெள்ளி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இவர்களது வெற்றிக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
பாரா ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். மணீஷ் நர்வால் வென்றிருக்கும் தங்கமும், சிங்கராஜ் அதனா வென்றிருக்கும் வெள்ளியும் போற்றுதலுக்குரியவை. சோதனைகளை வென்று சாதனை படைத்திட்ட இருவருக்கும் என் வாழ்த்துக்கள். pic.twitter.com/nhKzwb7NNB
— Kamal Haasan (@ikamalhaasan) September 4, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025