சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்தின் போது உதவி செய்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ட்வீட்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள், நோயாளிகளை சுமந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும், உதவி செய்த பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்து வந்தது.
இந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு – நேரத்தின் அருமை உணர்ந்து – பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்! காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்!’ என பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…