காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்தின் போது உதவி செய்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ட்வீட். 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள், நோயாளிகளை சுமந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும், உதவி செய்த பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்து வந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட சிறிய தீவிபத்து குறித்து செய்தி சேகரிக்க வந்த இடத்தில், மனிதத்தால் உந்தப்பட்டு – நேரத்தின் அருமை உணர்ந்து – பல உயிர்களைச் சேகரித்துத் தந்துள்ளனர் நம் ஊடகத்துறை நண்பர்கள்! காலத்தினால் செய்த நன்றிக்கு என் பாராட்டுகள்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai