என் குழந்தைக்கு ஜாதி கிடையாது.! கோவை தம்பதியின் அசத்தல் நகர்வு.!

Default Image

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். 33-வயதான இவர் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் மனைவி காயத்திரி தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு விமலா என்ற பெண்குழந்தை உள்ளது.

இந்த குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த தம்பதிகள் “வில்மா சாதி, மதம் சாராதவர்” என்ற சான்றிதழை வருவாய்த்துறையில் வாங்கியுள்ளனர். தனது மகளை பள்ளியில் சேர்க்க சென்றபோது சாதி சான்றிதழில் அவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிடவில்லை. இதனால் பள்ளிகளில் சேர்க்கும் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதன் பின், கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் தனது மகள் விமலாவிற்கு ஜாதி மதம் இல்லாமல் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என  விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு ஜாதி, மதம் குறிப்பிடாமல் சான்றிதழை தாசில்தார் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நரேஷ் ” தமிழக அரசு கடந்த 1973-ஆம் ஆண்டு  கல்வி நிறுவனங்களில் சாதி அடையாளங்களை குறிப்பிட வேண்டிய
அவசியம் இல்லை என அரசாணை பிறப்பித்துள்ளது. அப்படி இருந்தும்,  உதவித்தொகை உள்ளிட்ட காரணங்களுக்காக ஜாதி சான்றிதழ் வேண்டும் என்று கூறுகிறார்கள். ஜாதி, மதம் ஒழிந்தால் மட்டுமே மக்களிடம் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். இதனால் எனது மகளுக்கு ஜாதி மதம் இல்லாத சான்றிதழ் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து சான்றிதழ் பெற்றுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்