அன்புச்சகோதரர் அஜித்குமாருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் – துணை முதல்வர்

Default Image

துப்பாக்கிசூடு போட்டியில் தங்க பதக்கம் வென்ற நடிகர் அஜிகுமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம்.

சென்னையில் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 900க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித்குமார் தங்கம் பதக்கம் உள்ளிட்ட 6 பதக்கங்களை வென்றார். இதற்கு பல தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்