தூத்துக்குடியில் ரூ.368.75 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர்பழனிசாமி!
தூத்துக்குடியில் ரூ.368.75 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர்பழனிசாமி.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒவ்வொரு மாவட்டந்தோறும் சென்று, கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்கு, ரூ.368.75 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடக்கி வைத்துள்ளார்.
இன்று காலை 8:45 மணியளவில் தூத்துக்குடி வந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று, ரூ.16 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோய்க்கான நவீன கதிரியக்க சிகிச்சைகருவி மற்றும் ரூ.71.61 லட்சம் மதிப்பிலான மத்திய ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்துள்ளார்.
மேலும், ரூ.22.37 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்துள்ள நிலையில், ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ரூ.37.55 கோடி மதிப்பில் 15,792 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.