போதிய அக்கறை காட்ட வேண்டும் – தினகரன்
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்கள் 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தமளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பட்டாசு ஆலையில்ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,விருதுநகர் மாவட்டம் செங்குளம் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பெண்கள் 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தமளிக்கிறது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விபத்தில் காயமடைந்திருப்போர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன். இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் போதிய அக்கறை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இவ்விபத்தில் காயமடைந்திருப்போர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன். இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க, பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் போதிய அக்கறை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.2/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) October 23, 2020