வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் : மு.க.ஸ்டாலின்

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அனைவருக்கும் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ்சால் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில், இந்த கொரோனா வைரசால், 17,609 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 167 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அனைவருக்கும் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், சென்னையின் 5 மண்டலங்களைக் காப்பதில் அரசு முழுச்சிந்தனையும் பயன்படுத்த வேண்டும் என்றும், கொரோனா தொற்றால் தலைநகர் சென்னை மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளதாகவும் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.