“விஜய்யிடமிருந்து முஸ்லிம்கள் தள்ளி இருங்கள்” – அகில இந்திய முஸ்லிம் ஜமாத்.!
குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்ததாக ஜமாத் தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு நோன்பு திறந்தார். மேலும், நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மௌலானா முஃப்தி ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய முஸ்லீம் ஜமாத் என்ற அமைப்பு விஜய்க்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் இப்த்தார் நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தியதாகவும் இனி இஸ்லாமிய நிகழ்ச்சியில் எவரும் விஜய்யை அழைக்க வேண்டாம். விஜய்யிடம் இருந்து தள்ளியிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், ”முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே அவர்கள் ஏமாற்று வேலைகளைப் பயன்படுத்துகிறார்கள். முஸ்லிம்கள் இப்படி இருக்கக்கூடாது. அவர்களிடமிருந்து விலகி இருங்கள், அவர்களை உங்கள் கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள், மேலும் நோன்பின் போது நோன்பு நோற்பவர்களுடன் மட்டுமே நட்பு கொள்ளுங்கள்.
தவெக தலைவர் விஜயிடம் இருந்து தமிழ்நாடு இஸ்லாமியர்கள் தள்ளியிருக்க வேண்டும். தமிழ்நாட்டு இஸ்லாமியர்கள் விஜயை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்க வேண்டாம். இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஜயின் செயல்பாடுகள் இருப்பதாக அகில இந்திய முஸ்லீம் ஜமாத் சகாபுதீன் ராஜ்வி குற்றச்சாட்யுள்ளது.
சென்னையில் நடந்த இப்தார் விருந்தை விஜய் கொச்சைப்படுத்தி பாவம் செய்துவிட்டதாகவும், குடிகாரர்கள், சூதாட்டக்காரர்களை இப்தார் விருந்துக்கு விஜய் அழைத்து வந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த AIMJ இஸ்லாமிய அமைப்பு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவாக பேசியும், CAA சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
ऑल इंडिया मुस्लिम जमात के राष्ट्रीय अध्यक्ष और दारुल इफ्ता के चीफ मुफ्ती मौलाना शहाबुद्दीन रजवी बरेलवी ने @TVKVijayHQ के अध्यक्ष @actorvijay के बारे मे पूछे गये एक सवाल के जवाब में फतवा जारी किया. pic.twitter.com/ucQIskPp55
— Maulana Shahabuddin Razvi Bareilvi (@Shahabuddinbrly) April 16, 2025