2வது நாளாக களைகட்டும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்துகொண் இஸ்லாமிய பெண்கள்!
பழனி : இரண்டாம் நாளாக களைகட்டும் ‘முத்தமிழ் முருகன்’ மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் இரண்டாவது இன்றும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் அறநிலையத்துமுத்தமிழ் முருகன்றை அதிகாரிகள், நீதியரசர்கள், சமயப் பெரியவர்கள், தமிழறிஞர்கள், ஆன்மீக அன்பர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், அரசு அலுவலர்கள், முருக பக்தர்கள் கழகத்தினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, இந்த மாநாட்டில் இஸ்லாமிய பெண்களும் கலந்துகொண்டனர். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, எங்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது எந்தவித பாகுபாடும் இல்ல என இஸ்லாமியப் பெண்கள் நெகிழ்ச்சி தெரிவித்தனர்,
இன்றைய தினம், “நாட்டுப்புற கலையில் நற்றமிழ் முருகன்” என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சியும் திருவாரூர் சுருட்டை சுருஜித் குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல், மயிலாட்டம், கரகாட்டத்துடன் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அமைச்சர் சேகர் பாபு பேட்டி
பழனியைச் சுற்றி ஒலிக்கும் அரோகரா கோஷம் தான் ஒலிக்கிறது. அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் இடம்பெற்றிருக்கும் VR, 3D போன்ற தொழில்நுட்பங்களுடன் முருகன் கண்காட்சி மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்விழா பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கண்காட்சி இன்னும் வரும் ஆக.30-ம் தேதி வரை நீட்டிப்பதாக தெரிவித்தார்.
அதாவது, ‘முத்தமிழ் முருகன்’ மாநாடு முடிவடைந்த பிறகும், இந்த மாநாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கம் மற்றும் கண்காட்சி மேலும் ஒரு வாரம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.