இந்து கோவிலுக்கு இஸ்லாமியர் நிலம் வழங்கிய நெகிழ்ச்சி நிகழ்வு.!

காரைக்காலில் ஒரு இஸ்லாமியர் தனது நிலத்தில் கட்டப்பட்டுள்ள முனீஸ்வரர் கோவிலுக்கு, தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார்.
காரைக்காலில் உள்ள கீழகாசாகுடி பகுதியில் ஒத்தை பனைமர முனீஸ்வரர் கோவில் உள்ளது. அந்த கோவிலை சுற்றியுள்ள விளை நிலங்களை 35 ஆண்டுகளுக்கு முன்னரே அப்துல்காதர் என்கிற இஸ்லாமியர் விலைக்கு வாங்கிவிட்டார்.
அந்த சமயத்தில் முனீஸ்வரர் கோவில் சிறிய அளவில் இருந்துள்ளது. அங்கு பக்தர்கள் வந்து வழிபட்டு சென்று வந்துள்ளனர். தற்போது அப்பகுதியில் வீடுகள் அதிகமானதால், முனீஸ்வரர் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இதனை கண்ட அப்துல்காதர், கோவில் இருக்கும் அந்த இடத்தினை தானமாக வழங்கினார். புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் நிலத்தின் பட்டவை கோவில் நிர்வாகிகளிடம் அப்துல்காதர் வழங்கினார். ஒரு இஸ்லாமியர் தனது நிலத்தை இந்து கோவிலுக்காக வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை உண்டாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025