ராஜீவ் கொலை குற்றத்தில் இருந்து விடுதலை…..முருகன் மனைவி நளினி உடல்நிலை மோசம்…!!
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டுமென்று தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில் சிறையில் இருக்கும் முருகன் எங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.வேலூர் மத்திய சிறையில் கடந்த 2-ந்தேதி முதல் முருகன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றார். இதே போல இவரின் மனைவி நளினி_யும் தங்களை விடுதலை செய்யவேண்டுமென்று உண்ணாவிரமிளிருந்து வருகின்றார்.தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தால் அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.