மறைந்த தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் காண அனுமதி கேட்ட முருகன் ! மறுப்பு தெரிவித்த அரசு
மறைந்த தந்தையை காண முருகனுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.
சிறையில் உள்ள முருகனின் தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நேற்று சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை மரணமடைந்தார் .
எனவே முருகன் தனது வழக்கறிஞர் மூலமாக
தமிழக முதல்வர் மற்றும் சிறைத் துறைக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதாவது, உயிரிழந்த தனது தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால் முருகனின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது.