கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை!

Published by
Rebekal

கொலை செய்து ஜெயில் சென்று வந்ததால் கெத்து காட்டியவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தான் 27 வயதான மணிகண்டன். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பதாக மயிலாப்பூர் கபாலி தோட்டத்தில் வைத்து 17 வயது இளைஞன் வசந்த் என்பவரை கொலை செய்து குற்றவாளியாக சிறைக்கு சென்று ஒரு மாதத்திற்கு முன்புதான் பிணையில் வெளியே வந்துள்ளார். சிறையிலிருந்து வெளியே வந்துள்ளதால் ஏரியாவில் தான்தான் பெரிய ஆள் எனவும் ஜெயிலுக்குப் போயிட்டு வந்ததால ஏரியாவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் நான் சொல்வது தான் கேட்க வேண்டும் எனவும் இவர் கூறி வந்துள்ளார்.
நிலையில் மணிகண்டன் வசித்து வரக்கூடிய அதே பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு  என்பவரின் நண்பர் சிவாவிடம் ஆனந்தபாபு உடன் சேர்ந்து இனி ஏரியாவில் நீ சீன் போட கூடாது, நான் மட்டும் தான் போடுவேன் மீறினால் கொலை செய்துவிடுவேன் என கூறியுள்ளார். ஆனந்தபாபு ஒரு கூட்டமாகவும் மணிகண்டன் ஒரு கூட்டமாகவும் ஏரியாவில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஏரியாவில் இந்த இரண்டு கேங்க்கும் இடையில் அண்மையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் ஆனந்தபாபுவின் நண்பர்களான சிவா, கார்த்திக், ஸ்ரீதர், பரத்வராஜ் அனைவரும் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். கடந்த 23ஆம் தேதி மாலை மணிகண்டன் வழக்கம்போல ஆட்டோ ஓட்டி விட்டு பத்து மணியளவில் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற இந்த குழு அவரை கத்தியால் தலையில் வெட்டி கொலை செய்துள்ளனர், இந்நிலையில் இவர்கள் அனைவரையும் போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் தேடி வந்த நிலையில் ஐவரும் தாங்களாகவே நடந்ததைக் கூறி சரணடைந்துள்ளனர். தற்பொழுது இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆனந்தபாபு மீது ஏற்கனவே திருட்டு அடிதடி, வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

1 minute ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

1 hour ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

3 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

4 hours ago