உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேரை படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்
நேற்று முன்தினம் நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
பின் நேற்று நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமா மகேஷ்வரியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேரை படுகொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் .இதுபோன்ற சம்பவங்கள் முடிவே இல்லாமல் தொடர்கிறது என்று தெரிவித்தார்.