தூத்துக்குடியில் காதல் திருமண செய்த மாரிச்செல்வம் – கார்த்திகா வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி, முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு கார்த்திகா பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் மாரி செல்வம் பெற்றோர்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதனால், கடந்த 30-ஆம் தேதி கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் மாரி செல்வமும், கார்த்திகாவும் திருமணம் செய்து கொண்டு பின்னர் தூத்துக்குடிக்கு திரும்பி உள்ளனர்.
தங்களின் எதிர்ப்பை மீறி கார்த்திகா திருமணம் செய்ததால் அவரின் குடும்பத்தினர் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையில் முருகேசன் நகரில் புதிதாக காதல் திருமண செய்த மாரி செல்வமும், கார்த்திகாவும் ஒரு வீட்டில் இருந்துள்ளனர். நேற்று மாலை 3 பைக்கில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வீடு புகுந்து மாரி செல்வம், கார்த்திகேயன் இருவரையும் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர்.
இதையெடுத்து சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் கார்த்திகாவும், மாரி செல்வம் உயிரிழந்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாரிச்செல்வம், கார்த்திகா இருவரின் உடல்களையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் உயிரிழந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
இந்நிலையில், மாரிச்செல்வம், கார்த்திகா வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இசக்கி ராஜா, ராஜபாண்டி மற்றும் ஒரு சிறுவன் என மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…