சிவகாசி அருகே திருமணமான புது மணப்பெண் கொலை..?
சிவகாசி மாவட்டம் ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை வசித்து வந்தவர் செல்வமணிகண்டன் இவர் பட்டாசு தொழிலாளி மேலும் கடந்த ஒரு மாததிற்கு முன்பு செல்வமணிகண்டனிற்கும் திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த பிரகதி மோனிகா என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது .
இந்நிலையில் மேலும் வழக்கம் போல் செல்வமணிகண்டன் நேற்று காலை தனது வேலைக்கு சென்று விட்டார், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி பிரகதி மோனிகாவின் கை கால்கள் வெட்டுக்காயங்களுடன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கிடந்துள்ளது.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் பிரகதி மோனிகாவின் கழுத்தில் ஒரு பவுன் கொண்ட ஒரு தங்க சங்கிலி காணாமல் போக்கியுள்ளது தெரியவந்துள்ளது, மேலும் இதனால் இது திருட்டுக்காக நடந்த கொலையா..? அல்லது வேறு எதுவும முன்விரோத காரணமா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.