கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றச்சாட்டில் மேலும் 3 பேரை கைது செய்ததை காவல்துறை.
கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது:
கோவையில் நீதிமன்றம் அருகே ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. இருசக்கர வாகனத்தை தந்தது, கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றச்சாட்டில் மேலும் 3 பேரை கைது செய்துள்ளது தனிப்படை காவல்துறை. கொலை வழக்கில் 5 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், விக்ரம், விக்னேஷ் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையில் நீதிமன்றம் அருகே கோகுல் கொல்லப்பட்ட வழக்கில் நேரடி தொடர்புடைய 7 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்ற வளாக அருகே கொலை:
நேற்று முன்தினம் கோவையில் குற்ற வழக்கு ஒன்றில் 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது, அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் கோகுல் என்பவர் சம்பவ இயத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர், பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கோவை நீதிமன்ற வளாகம் அருகே ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை கும்பலை பிடிக்க தனிப்படை:
இந்த சம்பவத்தை தொடர்ந்து, கொலை கும்பலை பிடிக்க தனிப்படை போலி அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதன்பின், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான 5 பேரையும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர், கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட 2 பேரை மேட்டுப்பாளையம் அருகே துப்பாக்கியால் சுட்டு நேற்று கைது செய்தது காவல்துறை. இந்த நிலையில, கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த குற்றச்சாட்டில் மேலும் 3 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…