மலம் கழிக்கச் சென்று- மரணம் அடைந்த இளைஞர்..அடித்தே கொன்ற பொதுமக்கள்! என்ன நடந்தது..?

Default Image

மலம் கழிக்க சென்ற இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள காரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது(26). சக்திவேல் விழுப்புர மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்வத்தன்று மதியம் வீட்டிலிருந்து பணிக்கு தன்னுடையது இருசக்கர வாகனத்தில் கிளம்பிய அவர் செ.புதூர் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதி அருகே மலம் கழிப்பதற்காக ஆடையை கழட்டி உள்ளார்.இந்நிலையில் அருகில் வயலில் வேலை செய்திருந்த பெண்மணி சக்திவேலை தவறாக நினைத்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.இதனால் அவருடைய கூச்சலைக்கேட்டு  அவருடைய உறவினர்களையும் அழைத்து உள்ளார்.

இதனால் பயந்து அங்கிருந்து தலைதெறிக்க சக்திவேல் ஓடியுள்ளார். ஓடிய அவரை விரட்டிச் சென்ற உறவினர்கள் மக்கள் மக்கள் அவரை பிடித்து கை மற்றும் கால்களை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். தாக்குதலில் சக்திவேலுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு பதற்மான சூழல் நிலவிய நிலையில் அங்கு வந்த பெரியதச்சூர் காவல் உதவி ஆய்வாளர் வினோத்சக்திவேலை மீட்டார்.இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி உள்ளார்.காயமடைந்ததோடு வீட்டுக்குச் சென்ற சக்திவேல் சிறு நேரத்தில் உடனே மயங்கி விழுந்து  உயிரிழந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live dharmendra pradhan
DMK MPs iniviting various state CMs
Jio - Starlink
hardik pandya virat kohli and rohit sharma
Malavika Mohanan sad
dharmendra pradhan Anbil Mahesh Poyyamozhi
Donald Trump Volodymyr Zelenskyy