கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் முழுவதும் பாடாய் படுத்தி வரும் நிலையில் ஒரு ஆடு விளைச்சல் நிலத்தில் மேய்ந்ததால் 20 பேர் அரிவாள் வெட்டால் படுகாயமடைந்தும், ஒருவர் உயிரிழந்த வருந்ததக்க சம்பவம் குறித்த செய்தி தான் இந்த செய்தி தொகுப்பு. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகே உள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் முனியசாமி. இவர் அப்பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
சம்பவ நாளன்று வழக்கமாக ஆடுகளை மேய்ப்பதற்காக வயல்காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். மேய்ச்சலின் போது கடும் வெயிலின் தாக்கத்தினால் சோர்வடைந்த முனியசாமி சற்று இளைப்பாற அப்பகுதியில் இருந்த மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துள்ளார். அந்நேரத்தில் வயல்காட்டுப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் அருகில் இருந்த பாண்டி என்பவரது பருத்திக் காட்டில் புகுந்து பருத்திச் செடிகளை மேய்ந்துள்ளது. இதைக்கண்ட அந்த காட்டின் உரிமையாளர் பாண்டியும் அவரின் மகன் ஆனந்தும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்த முனியசாமியைத் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் ஆட்டுக்காரர் முனியசாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின், ரத்தக் காயத்துடன் வந்த முனியசாமியைக் கண்ட அவரது உறவினர்கள் பாண்டியைத் தேடிச் சென்றுள்ளனர். அங்கு பாண்டி தரப்பிற்க்கும், முனியசாமி தரப்பிற்க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் அரிவாள், கத்தி, கம்புகளால் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் பாண்டி தரப்பில் 6 பேருக்கும், முனியசாமி தரப்பில் 14 பேருக்கும் பலத்த காயமடைந்தது. இதையடுத்து, காயமடைந்தவர்கள் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த திருமால் என்பவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு திருமால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தகவல் அறிந்த கமுதி காவல்துறையினர் இரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரெங்கும் கொரோனா அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், பருத்திச் செடியை ஆடு மேய்ந்ததால் ஏற்பட்ட மோதலில் பலரும் வெட்டுக் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…