மனைவி மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கணவன் தப்பி ஓடிய சம்பவம் மதுரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஆனது மதுரை திருநகர் எஸ்.ஆர்.வி. நகரில் நடந்துள்ளது.இந்த பகுதியை சேர்ந்தவர் அசோக் வயது 32ஆகிறது. இவருடைய மனைவி சுதா வயது 27 ஆகிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.திருமணம் ஆகி ஒரு பெண், மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவர் அசோக் எந்த வேலைக்கும் செல்லாமல் மனைவி சுதா வேலை பார்க்கும் இடத்திற்கு அடிக்கடி சென்று பணம் வாங்கி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக தம்பதிகளுக்கு இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன் சுதா வேலை தொடர்பாக கோயம்புத்தூர் சென்றுள்ளார் தான் கோயம்புத்தூர் செல்வது குறித்து கணவரிடம் கூறாமல் சென்றுள்ளார். இதனால் மனைவி மீது சந்தேகம் அடைந்த அசோக் தனது 2 குழந்தைகளை தன் பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு விட்டு வந்துள்ளார். இதற்கிடையில் கோயம்புத்தூரில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுதா குழந்தைகளை அழைத்து வரும்படி அசோக்கிடம் கூறியுள்ளார்.அசோக் தனியாக வீட்டிற்கு வந்துள்ளார்.குழந்தைகள் எங்கே என்று மனைவி சுதா கேட்க கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தகராறு உச்சக்கட்டத்திற்கு சென்ற நிலையில் கணவன் தன்னுடைய மனைவி சுதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்நிலையில் இக்கொலை குறித்து தகவலறிந்து வந்த திருநகர் போலீசார் இறந்து கிடந்த சுதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பியோடிய அசோக்கின் பெற்றோர்களை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் அசோக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…