கோவை நீதிமன்ற வளாகத்தில் கொலை – 4 பேர் கைது..!
கோவை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கோவை நீதிமன்ற வளாகத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரை அரிவாளால் வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பல் இருவர் மீது தாக்குதல் நடத்திய நிலையில், கோகுல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மனோஜ் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். கொலை கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் காவல்த்துறையினர் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இந்த கொலை விவகாரத்தில், நீலகிரியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில், நான்கு பேரை வாகன சோதனையின் போது போலீசார் மடக்கி பிடித்தனர்.