cm mk stalin [File Image]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளது எனவும், சமீபகாலமாக கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை குற்றவாளிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் .
அதற்கு பதில் அளிக்கும் வகையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் போகிற போக்கில் சொல்லிவிட்டு செல்கிறார். அவரை போன்று டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று கூற மாட்டேன் புள்ளிவிவரங்களுடன் சட்டசபையில் தெரியப்படுத்துவேன். கடந்த 2024’ல் மட்டும் 4,571 சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் எங்கேயாவது குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பின் மேற்கொள்ளப்படும் துரித சம்பவங்கள் ஒருபுறம், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என இருவழியிலும் காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. தொடர் குற்றவாளிகள், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைதுகள், குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக, எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதைப்போல, கொலை சம்பவங்களும் குறைந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தான் அதிகமாக கொலைகள் நடந்தது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், 2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு. அதைப்போல, அதற்கு அடுத்த ஆண்டாள் 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன.
ஆனால், கடந்த 2024 ஆண்டில் தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தூத்துக்குடி சம்பவம், சாத்தான்குளம் சம்பவத்தை எல்லாம் பழனிசாமி மறந்துவிட்டார். அவரை மாதிரி ‘டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்’ என்று சொல்லும் ஆட்சி அல்ல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி” எனவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…