அதிமுக ஆட்சியில் கொலை,கொள்ளை நடைபெறவில்லை என்று சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, சட்ட ஒழுங்கு, தீயணைப்பு & மீட்பு பணிகள் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,அதிமுக ஆட்சியில் கொலை,கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என்று சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,”தூத்துக்குடியில் ஜீப் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிமுக ஆட்சியில்தானே, அப்போது நீங்கள்தானே முதலமைச்சர்”,என்று பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து,கோடநாடு விவகாரம் சாதாரணமான விஷயமல்ல;அதைஎதில் சேர்ப்பது?,மேலும், கோடநாடு வழக்கை விசாரிக்கக் கூடாது என ஏன் நீதிமன்றம் சென்றீர்கள்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில்,கோடநாடு சம்பவம் குறித்து முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்,வழக்கிற்கு தாங்கள் தடை கேட்கவே இல்லை என்றும்,மேலும்,தங்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…