மனைவியே காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே முறைதவறிய உறவை கண்டித்த கணவனை அடியாட்களை வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
கல்பாக்கத்தை அடுத்த ஆயப்பாக்கம் வ.வு.சி.நகரைச் சேர்ந்த செல்வம் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு சந்திரமதி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். செல்வம் திங்கட்கிழமை காலை பூந்தண்டலம் கிளையாறு அருகே வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். செல்வம் உடலை சதுரங்கப்பட்டினம் போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். செல்வத்தின் செல்போனுக்கு வந்த அழைப்புகளையும், அவர் உயிரிழந்து கிடந்த இடத்திலிருந்து கிடைத்த செல்போன் சிக்னல்களையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதில் கொலை நிகழ்ந்த இடத்திலிருந்து செல்வத்தின் மனைவியான அம்மு என்கிற சந்திரமதியின் மொபைல் எண்ணுக்கு அழைப்பு ஒன்று வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து சந்திரமதியைப் பிடித்து போலீஸார் உரியமுறையில் விசாரித்த போது, தனது கணவர் செல்வத்தை ஆட்கள் வைத்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் படி சந்திரமதிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்ததாகவும், இதனை ஊர்மக்கள் கண்டித்து அந்த இளைஞருக்கு வேறு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் செல்வத்திற்கும் சந்திரமதிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கணவர் செல்வத்தை கொலை செய்ய முடிவு செய்த சந்திரமதி, இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் உள்ளிட்டோரின் உதவியை நாடியுள்ளார்.
இவர்கள் தீட்டிய திட்டத்தின் அடிப்படையிலேயே ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிய செல்வத்தை 9 மணியளவில் சவாரி இருப்பதாகக் கூறி ஸ்ரீதர் உள்ளிட்டோர் திரும்ப அழைத்துள்ளனர். தன் கணவர் வீடு திரும்பியதையும், திரும்ப புறப்பட்டு செல்வதையும் சந்திரமதியே செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். ஆயப்பாக்கத்திலிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் நோக்கிச் சென்ற செல்வத்திற்கு போன் செய்த ஸ்ரீதர், ஆனந்த், கார்த்திக் உள்ளிட்டோர் பூந்தண்டலம் பகுதிக்கு வரவழைத்தனர்.
இருட்டான வயல்வெளிக்கு செல்வத்தை அழைத்துச் சென்ற அவர்கள் இரும்புக் கம்பியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர்.செல்வத்தின் மனைவி சந்திரமதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆனந்த் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையில் தொடர்புடைய ஸ்ரீதர், கார்த்திக் மற்றும் சென்னையைச் சேர்ந்த இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…