பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு!முதல்வர்

Published by
Venu

ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு, காயமடைந்த காவலர்கள் மருத்துவச்செலவை அரசே ஏற்பு உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று போலீஸார் மத்தியில் கோரிக்கை எழுந்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை கோரிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு உயிரிழந்த இன்ஸ்பெக்டர் மற்றும் காயமடைந்த காவலர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது.

இது குறித்த முதல்வர் எடப்பாடியின் அறிவிப்பு வருமாறு:

”கடந்த 16/11/17 அன்று கொளத்தூரில் நகைக்கடை ஒன்றில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சென்னராம், கேளாராம், தன்வர்ஜி மற்றும் சங்கர்லால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாதுராம் மற்றும் தினேஷ் ஆகியோர் தப்பிச்சென்றனர். அவர்களை பிடிக்க மதுரவாயல் காவல ஆய்வாளர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி முதல் நிலைக்காவலர் சுதர்சன் உள்ளிட்டோர் 8/12/17 அன்று ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றனர்.

இன்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குற்றவாளிகள் தங்கியிருந்த கூடாரத்தை சுற்றி வளைத்து அவர்களை பிடிக்க முற்பட்டபோது, குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்டதில் மதுரவாயல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு துயரமடைந்தேன்.

இதி உடன் சென்ற காவலர்கள் காயமடைந்தனர் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் நல்ல முறையில் குணமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெரிய பாண்டியன் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளேன். அவரது மகன்கள் ரூபன் மற்றும் ராகுல் படிப்புச் செலவையும் அரசே ஏற்கும்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வரும் ஆய்வாளர் முனிசேகர் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் சுதர்சன் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சமும், அவர்கள் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

புயலாக வலுப்பெற இன்னும் 12 மணி நேரம்! தாமதத்திற்கான காரணம் என்ன?

புயலாக வலுப்பெற இன்னும் 12 மணி நேரம்! தாமதத்திற்கான காரணம் என்ன?

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…

5 hours ago

“சேர்ந்து வாழ எண்ணம் இல்லை”..நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…

7 hours ago

இந்த வருஷம் மிஸ்ஸே ஆகாது…முரட்டு லைன் அப்பில் ஹைதராபாத்!

ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…

7 hours ago

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…

8 hours ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் : நடப்பு சாம்பியனை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி!

சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…

8 hours ago

மாமல்லபுரம் அருகே பயங்கர விபத்து! மாடு மேய்த்துக்கொண்டிருந்த 5 பெண்கள் பலி!

செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…

9 hours ago