முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.அதை பூட்டுப்போட விடுவோமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அசுரன் படத்தை பார்த்துவிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பஞ்சமி நிலம் குறித்து கருத்து கூறியிருந்தார்.இதனையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து முதல் பஞ்சமி நிலம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,உரிய நேரத்திற்கு முன்பு திமுக முரசொலி அலுவலக இட ஆவணத்தை ஒப்படைக்க வில்லையென்றால் தற்காலிகமாக முரசொலி அலுவலகத்திற்கு சீல்வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசுகையில், முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார்.அதை பூட்டுப்போட விடுவோமா? என்று கேள்வி எழுப்பினார். முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்திருந்தால் அதை வெளியிடாமல் இருப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…