முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலூரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவரான எல்.முருகன் அவர்கள்,திமுகவின் முரசொலி அலுவலகம் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று கூறியதால் சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எல்.முருகன் மீது திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கிடையில்,தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த ஆண்டு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. பின்னர்,நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பலமுறை உத்தரவிடப்பட்டபோதும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராகாத நிலையில், இந்த வழக்கில் மே 2-ம் தேதி எல்.முருகன் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டு உள்ளனர்.
சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில்…
சென்னை : தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் இன்று, அதாவது (ஏப்ரல் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. …
சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும்…
சென்னை : கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று, அதாவது 2025 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், ஒரு வார கால ஆராய்ச்சிப் பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)…
மும்பை : ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…