சென்னை உயர்நீதிமன்றதிற்கு புதிய தலைமை நீதிபதி முரளிதர்.!
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஒடிசா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தற்போது நீதிபதி முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நீதிபதி துரைசாமி பதவி வகித்தார். அவருடைய பதவிக்காலம் அண்மையில் நிறைவு பெற்றதை அடுத்து அந்த இடத்திற்கு புதிய நீதிபதியாக தற்போது முரளிதர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரை ஏற்கனவே உச்சநீதிமான்ற கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், தற்போது இவர் அதிகாரபூர்வமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் வேதியியல் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் தற்போது ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இருக்கிறார். தற்போது இவர் சென்னைக்கு மாற்றப்பட்டதால் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜஸ்வந்த் சிங் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறுகிறார்.
இதே போல, ஜம்மு காஷ்மீர் உயநீதிமன்ற தலைமை தலைமை நீதிபதி , ராஜஸ்தான் மாநிலத்திற்கும், உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜார்கண்ட் மாநிலத்திற்கும், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மும்பை உயர்நீதிமன்றத்திற்கும், ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரிபுராவுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவின் படி மாற்றப்பட்டுள்ளனர்.