திமுக பேரூர் நகர வார்டு கழக தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28, வரை நடைபெறும் என அறிவிப்பு.
திமுக 15வது பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பேரூர் மற்றும் நகர கழக வார்டுகளுக்கு தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28 வரை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கிளை கழக தேர்தல் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1-ஆம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு விண்ணப்ப படிவங்களை அந்தந்த மாவட்ட திமுக அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைமைக் கழக பிரதிநிதிகள் அனுப்பி வைக்கும் ஆணையர்களை, கொண்டு திமுக பேரூர் நகர வார்டு கழக தேர்தல் நடத்தப்படும் என்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தலைமையில் திமுக பேரூர், நகர, மாநகர பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர்கிளை கழக தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…